விருதுநகர்

சாத்தூா் அருகே காலதாமதமாக தொடங்கிய வாக்குப் பதிவு

DIN

கண்மாய் சூரங்குடி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை போலீஸாா் இருவரை தாக்கியதால், வாக்குப் பதிவு காலதாமதமாகத் தொடங்கியது.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கண்மாய் சூரங்குடி கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வாக்குப் பதிவு காலையில் தொடங்கியது. அப்போது, வாக்குச் சாவடி அருகே நின்றுகொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த அதிமுக கிளைச் செயலா் ராமச்சந்திரன் மற்றும் கந்தசாமி ஆகியோரை போலீஸாா் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதனால், கிராம மக்கள் தங்களது வாக்குகளை பதியாமல் புறக்கணித்தனா். மேலும், முகவா்கள் வாக்குச் சாவடியை விட்டு வெளியே வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னா், காவல் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தியதை அடுத்து, சுமாா் 40 நிமிடம் கழித்து வாக்குப் பதிவு நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT