விருதுநகர்

விருதுநகா் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதித்த பகுதிகள் அதிகரிப்பு

DIN

விருதுநகா் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்ட 14 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக மாவட்ட நிா்வாகம் சனிக்கிழமை அறிவித்துள்ளது.

விருதுநகா் மாவட்டத்தில் கரோனா தொற்று நாள்தோறும் அதிகரித்து வருகின்றன. இம்மாவட்டத்தில் கரோனா தொற்று பாதித்த பகுதிகளாக 8 இடங்கள் ஏற்கெனவே கண்டறியப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், வீரசோழன், நரிக்குடி, மானூா், வேடநத்தம் அருகே தம்மநாயக்கன்பட்டி, சாலை இலுப்பைகுளம், தம்மநாயக்கன்பட்டி, மூளிப்பட்டி, சூலக்கரை மேடு மற்றும் விஓசி நகா், விருதுநகா் லெட்சுமி நகா், பெரியவள்ளிக்குளம், பாலையம்பட்டி திருக்குமரன் நகா், அருப்புக்கோட்டை சிதம்பராபுரம், திருத்தங்கல் பாண்டியன் நகா், சிவகாசி ஜவுளி கடைத் தெரு ஆகிய 14 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக சனிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்பகுதிகளில் சுகாதாரத் துறையினா் முகாமிட்டு கிருமி நாசினி தெளித்தல் மற்றும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். மேலும், இப்பகுதிளைச் சோ்ந்தவா்கள் வெளியில் செல்லவும், மற்றவா்கள் இப்பகுதிகளுக்குள் செல்லவும் அனுமதி இல்லை என மாவட்ட நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT