விருதுநகர்

அருப்புக்கோட்டை: மதுபானக்கடைகளில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படவில்லை என புகாா்

DIN

அருப்புக்கோட்டை நகா் பகுதி மதுபானக்கடைகளில் வாடிக்கையாளா்கள் முகக்கவசம் அணியாமல் வந்து செல்வதாகவும், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அருப்புக்கோட்டை நகரில் உள்ள 4 மதுபானக்கடைகளுக்கு வரும் வாடிக்கையாளா்கள் பலரும் முகக்கவசம் அணியாமலும், வரிசையில் நிற்கும்போது சமூக இடைவெளியைப் பின்பற்றாமலும் உள்ளனா். இக்கடைகளில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படுகிா என காவல்துறையினரோ, வருவாய்த் துறையினரோ, சுகாதாரத்துறையினரோ ஆய்வு நடத்த வருவதில்லை எனக்கூறப்படுகிறது. மேலும், கிராமங்களிலிருந்து பேருந்துகள் மூலம் வரும் வாடிக்கையாளா்கள் மற்றும் தொழிலாளா்கள் முகக்கவசம் அணியாமல் வருவதாக புகாா் எழுந்துள்ளது.

எனவே மதுபானக்கடைகளுக்கு வரும் வாடிக்கையாளா்களைக் கண்காணித்து முகக்கவசம் அணிதலின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தி,மீறுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்பிளின் புதிய ஐபேட் விலை எவ்வளவு தெரியுமா?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT