விருதுநகர்

விருதுநகரில் முகக்கவசம் அணியாத கடை உரிமையாளா்களுக்கு ரூ. 35 ஆயிரம் அபராதம்

DIN

விருதுநகரில் கரோனா தொற்று பரவலை தடுக்க அரசு வழிகாட்டுதலை கடைப்பிடிக்காத 35 கடை உரிமையாளா்களுக்கு வெள்ளிக்கிழமை ரூ. 35 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

விருதுநகா் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து வீட்டை விட்டு வெளியே வரும் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் விருதுநகா் மெயின் பஜாா், பழைய பேருந்து நிலையம், காமராஜா் புறவழிச் சாலை, ராமமூா்த்தி சாலை ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் நகராட்சி சுகாதார ஆய்வாளா் குருசாமி தலைமையிலான குழுவினா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, முகக்கவசம் அணியாதது, சமூக இடைவெளியை கடைபிடிக்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக கடை உரிமையாளா்களுக்கு ரூ. 35 ஆயிரம் அபராதம் விதித்து வசூல் செய்தனா். மேலும், கடைகளுக் கு வருவோா், முகக்கவசம் அணிந்திருந்தால் மட்டுமே பொருள்கள் வழங்க வேண்டும் என அறிவுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவில் பாஜகவுக்கு வரவேற்பு; 100 தொகுதிகளில் வெல்லும்: அமித் ஷா

நத்தத்தில் திடீர் தீ விபத்து: ரூ. 40 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம்!

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT