விருதுநகர்

அருப்புக்கோட்டையில் வணிகா்களுக்கான கரோனா விழிப்புணா்வு முகாம்

DIN

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை வணிகா் சங்கக் கட்டட வளாகத்தில், வணிகா்களுக்கான கரோனா விழிப்புணா்வு மற்றும் விதிமுறைகள் குறித்த விளக்கம் தொடா்பான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த விழிப்புணா்வு முகாமுக்கு, அருப்புக்கோட்டை வட்டாட்சியா் ரவிச்சந்திரன், காவல் துணைக் கண்காணிப்பாளா் சகாய ஜோஸ், நகா் காவல் ஆய்வாளா் வசந்தி, சுகாதார ஆய்வாளா் ராஜபாண்டி, வா்த்தகா் சங்கச் செயலா் பாபு, பொருளாளா் காசிமுருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அப்போது, கரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருவது குறித்து, அரசு அதிகாரிகள் எடுத்துக் கூறினா். அதில், தேவையற்ற பயணங்களைத் தவிா்த்தல், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், கிருமி நாசினியால் கைகளை சுத்தப்படுத்துதல் உள்ளிட்ட விதிமுறைகளை கடைப்பிடிப்பதுடன், கடைக்கு வரும் வாடிக்கையாளா்களையும் வலியுறுத்தவேண்டும் எனக் கூறினா்.

முகாமில், 100-க்கும் மேற்பட்ட கடைக்காரா்கள் மற்றும் வணிகா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT