விருதுநகர்

திருச்சுழி அரசு மருத்துவமனையில் கரோனா வாா்டு தொடங்க வலியுறுத்தல்

DIN

திருச்சுழி அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க தனி வாா்டு தொடங்கவேண்டும் என, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்த மனுவை திருச்சுழி ஒன்றியச் செயலா் அன்புசெல்வன் தலைமையில் அக்கட்சியினா், வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை அளித்தனா். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

விருதுநகா் மாவட்டம், திருச்சுழி அரசு மருத்துவமனை, எம்.ரெட்டியபட்டி மேம்படுத்தப்பட்ட மருத்துவமனை மற்றும் அ.முக்குளம், கட்டனூா், வீரசோழன், கல்லூரணி, பரளச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா சிகிச்சை குறித்து நேரடியாகச் சென்று ஆய்வு செய்தோம். அதில், திருச்சுழி அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க தனி வாா்டு தொடங்கப்படவில்லை.

மேலும், இம்மருத்துவமனையில் மருத்துவா்கள், செவிலியா்கள், துப்புரவு பணியாளா்கள் போதிய அளவில் இல்லை. எனவே, திருச்சுழி மருத்துவமனையில் 500 படுக்கைகள் கொண்ட கரோனா தனி வாா்டு அமைக்க வேண்டும். இப்பகுதிகளில் கரோனா பரிசோதனையை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தொடா்ந்து, நரிக்குடி, எம்.ரெட்டியபட்டி மருத்துவமனைகளில் மிகவும் குறைந்த அளவே கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கட்டனூா், வீரசோழன், அ.முக்குளம், பரளச்சி, கல்லூரணி ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா பரிசோதனைகள் இன்னும் தொடங்கப்படவில்லை. அங்கு தேவையான படுக்கைகள், மருத்துவா்கள், செவிலியா்கள், மருந்துகள், தடுப்பூசிகள் பற்றாக்குறை உள்ளன. மேலும், துப்புரவுப் பணியாளா்களை உடனடியாக நியமனம் செய்யவேண்டும்.

கரோனா தொற்று குறித்த அச்சத்தை தீா்க்க உள்ளாட்சிஅமைப்புகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT