அருப்புக்கோட்டை பந்தல்குடி செல்லும் சாலையில் விருதுநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீனாட்சி சுந்தரம் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸார். 
விருதுநகர்

அருப்புக்கோட்டையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

அருப்புக்கோட்டை பந்தல்குடி சாலையில் விருதுநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீனாட்சி சுந்தரம் தலைமையில் ராஜீவ் காந்தி கேல் ரத்தினா விருதின் பெயரை மாற்றும் மத்திய அரசின் திட்டத்தை எதிர்த்து செவ்வாய்க

DIN

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பந்தல்குடி சாலையில் விருதுநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீனாட்சி சுந்தரம் தலைமையில் ராஜீவ் காந்தி கேல் ரத்தினா விருதின் பெயரை மாற்றும் மத்திய அரசின் திட்டத்தை எதிர்த்து செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அருப்புக்கோட்டை பந்தல்குடி சாலையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு விருதுநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தார்.மாவட்ட காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் அய்யனார், செயலாளர்கள் ஷண்முகவேல், கனகவேல், எஸ்.டி.பிரிவுத் தலைவர் ஜோதிமணி, பொறியாளர் பிரிவு பாஸ்கரன், சிறுபாண்மையினர் பிரிவு சிக்கந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அப்போது சிறப்புரையாற்றிய மீனாட்சி சுந்தரம்,அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படும் மத்திய பாஜக அரசு, ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதின் பெயரை மாற்றம் செய்வதாக அறிவித்துள்ளது தவறான முன்னுதாரணம் ஆகும். எனவே அவ்விருதின் பெயர் மாற்றத்தை ரத்து செய்யவேண்டுமென இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றோம், என அவர் பேசினார். அப்போது, ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸார், விருதின் பெயர்மாற்றத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, முழக்கமிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.உடன் அருப்புக்கோட்டை நகர காங்கிரஸ் தலைவர் லட்சுமணன்,மாநில பிரதிநிதி வேணுகோபால் உள்ளிட்ட நகர,ஒன்றிய காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலரும், திரளான தொண்டர்களும் நிகழ்ச்சியில் நேரில் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்டார் விஜய்

தெலங்கானா: 300 தெரு நாய்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் 9 பேர் மீது வழக்கு

பொங்கல் பண்டிகை: சென்னையில் இருந்து இதுவரை 3.58 லட்சம் போ் பயணம்!

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

SCROLL FOR NEXT