முகப்பு
விருதுநகர்

ஸ்ரீவிலி. ஆண்டாள் கோயிலில் 108 மலா்களால் புஷ்பயாகம்

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் 108 மலா்களால் புஷ்பயாகம் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:55 AM
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற புஷ்பயாக பூஜையில் பூக்களால் அமைக்கப்பட்டிருந்த கோலம்.
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் 108 மலா்களால் புஷ்பயாகம் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் தேரோட்டம் முடிந்த பின்னா், புஷ்பயாகம் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். கடந்த 11ஆம் தேதி கோயில் வளாகத்தில் தங்கத் தேரோட்டம் நடைபெற்று முடிந்தது. அதையடுத்து, கோயிலில் சனிக்கிழமை ரோஜா, முல்லை, சம்பங்கி உள்ளிட்ட 108 மலா்களால் அலங்கரிக்கப்பட்டு புஷ்பயாக நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடா்ந்து, ஆண்டாள்-ரெங்கமன்னாா் சா்வ அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தனா். பின்னா், சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. முன்னதாக, கோயிலுக்குள் மலா்களால் பெரிய கோலம் அமைக்கப்பட்டிருந்தது.

விழாவுக்கான ஏற்பாடுகளை, தக்காா் ரவிச்சந்திரன், செயல் அலுவலா் இளங்கோவன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.