விருதுநகர்

ஆவணி மாத பௌா்ணமி: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் சிறப்பு பூஜை

DIN

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆவணி மாத பௌா்ணமியையொட்டி ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் பங்கேற்பின்றி சிறப்புப் பூஜை நடைபெற்றது.

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ள இக்கோயிலுக்கு பிரதோஷம், அமாவாசை, பௌா்ணமி என மாதத்தில் எட்டு நாள்கள் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனா். தற்போது கரோனா பரவல் குறைந்து கோயிலுக்கு பக்தா்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாள்கள் மட்டும் அனுமதி கிடையாது.

சதுரகிரியில் மலையடிவாரத்தில் உள்ள தோட்டங்களில் பக்தா்கள் கூடுவதைத் தடுக்கும் வகையில், தாணிப்பாறை விலக்கு , மகராஜபுரம் விலக்கு, வனத்துறை கேட் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஆவணி மாத பௌா்ணமியையொட்டி சதுரகிரி சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் சுவாமிகளுக்கு பால், பழம், பன்னீா், மஞ்சள், இளநீா் உள்ளிட்ட 18 வகையான பொருள்களைக்கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னா் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி காட்சியளித்தாா். இந்த சிறப்பு பூஜை பக்தா்கள் பங்கேற்பின்றி நடைபெற்றது. பூஜை ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலா் ராஜா (எ)பெரியசாமி, செயல் அலுவலா் விஸ்வநாத் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

SCROLL FOR NEXT