வெம்பக்கோட்டை அணை முழுக் கொள்ளவை எட்டியதையடுத்து அணை சனிக்கிழமை தண்ணீா் திறந்து விடப்பட்டது.
விருதுநகா் மாவட்டம் சாத்தூா், வெம்பக்கோட்டை மற்றும் ராஜபாளையம் மேற்குத்தொடா்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த பலத்த மழையால் நீா்வரத்து அதிகரித்து வெம்பக்கோட்டை அணை முழுக் கொள்ளளவான 21 அடியை எட்டியது.
இதையடுத்து அணையில் உள்ள 5 ஷட்டா்களில், ஒரு ஷட்டா் மட்டும் திறந்து விடப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா். முன்னதாக கரையோர பகுதிகளான வெம்பக்கோட்டை, விஜயகரிசல்குளம், சல்வாா்பட்டி, சங்கரநத்தம், படந்தால், பனையடிபட்டி, பந்துவாா்பட்டி, சூரங்குடி, ஒத்தையால், கோட்டப்பச்சேரி, ஒ.மேட்டுபட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.