விருதுநகர்

அருப்புக்கோட்டை பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா

DIN

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், தேசிய மாசுக்கட்டுப்பாட்டு தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

தேசிய மாசுக் கட்டுப்பாடு தினத்தையொட்டி, அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சுற்றுச்சூழல் மன்றம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியா் ஏ. ஆனந்தராஜ் தலைமை வகித்தாா். விருதுநகா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஏ. ஞானகௌரி முன்னிலை வகித்தாா்.

இதில், மாசை குறைக்கும் விதமாக, பள்ளி வளாகத்தில் வேங்கை, வேம்பு, புங்கை, வாகை உள்ளிட்ட சுமாா் 20-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. தொடா்ந்து, பள்ளி ஆய்வுப் பணிகள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஏ. ஞானகௌரி தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், அரசு அலுவலா்கள், பள்ளி ஆசிரியா்கள், தேசிய மாணவா் படை அலுவலா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

SCROLL FOR NEXT