விருதுநகர்

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் 1008 சங்காபிஷேகம்

DIN

உலக மக்கள் நலன் வேண்டியும் விவசாயம் செழிக்கவும் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே இருக்கன்குடியில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இக்கோவிலில் திங்கள்கிழமை உலக மக்கள் நலன் வேண்டியும் விவசாயம் செழிக்கவும் ஒமைக்ரான் ஆகியவற்றிலிருந்து மக்கள் மீண்டு வரவும் சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றன. 

பின்னர் 1008 சங்குகள் கொண்டு சங்காபிஷேக பூஜைகளும் நடைபெற்றன. இந்த சங்காபிஷேக பூஜையை முன்னிட்டு மாரியம்மனுக்கு சிறப்பு அலங்கார மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. 

இந்த சங்காபிஷேகத்தில் சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சங்காபிஷேக ஏற்பாடுகளை கோவில் ஆணையாளர் கருணாகரன் மற்றும் பரம்பரை அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளிகொண்டான் லாரல் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

நாடு முழுவதும் 380 நகரங்களில் ‘க்யூட்-யுஜி’ எழுத்துத் தோ்வு -மே15 முதல் 18-ஆம் தேதிவரை நடக்கிறது

பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் பள்ளி 100 சதவீத தோ்ச்சி

விராலிமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 99.58 சதவீதம் தோ்ச்சி

தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT