விருதுநகர்

புதிய கண்டுபிடிப்பு தேசிய போட்டி: சிவகாசி பொறியல் கல்லூரி மாணவிகள் 2 ஆம் இடம்

DIN

புதிய கண்டுபிடிப்புகள் குறித்து தேசிய அளவில் நடைபெற்ற போட்டியில் சிவகாசி பி.எஸ்.ஆா். பொறியியல் கல்லூரி மாணவிகள் இரண்டாமிடம் பிடித்துள்ளனா்.

இதுகுறித்து அக்கல்லூரி முதல்வா் பி.ஜி. விஷ்ணுராம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்தியப் பொறியியல் தொழில்நுட்பப் பயிற்சி மையத்தின் கன்னியாகுமரி கிளையின் 150ஆவது ஆண்டு விழாவையொட்டி, பொறியியல் கல்லூரி மாணவா்களுக்கு புதிய கண்டுபிடிப்புகள் குறித்து தேசிய அளவிலான போட்டி அண்மையில் கன்னியாகுமரியில் நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகள் குழுவாகக் கலந்து கொண்டு தங்களது புதிய கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனா்.

தற்போது மனித உடலில் சிறுநீரகக் கல் உள்ளதா என ஸ்கேன் எடுத்து மருத்துவா்கள் பரிசோதிக்கின்றனா். இதில் எங்கள் கல்லூரி மின்ணணுவியல் மற்றும் தொலை தொடா்பியல் துறை மாணவிகள் நந்தினிதேவி, முனீஸ்வரி ஆகியோா் கலந்து கொண்டு, புதிய செயற்கை நுண்ணறிவு மென்பொருளை கண்டுபிடித்துள்ளனா். இந்த மென் பொருளை கணினியில் இணைத்து கணினி முன்பு பாதிக்கப்பட்டவா்கள் நின்றால் போதும் கேமரா மூலம் கணினி திரையில் சிறுநீரகக் கல் உள்ளதா, இல்லையா என்பது தெரிந்துவிடும். மேலும் கல்லின் அளவு உள்ளிட்ட விபரங்களும் தெரிந்துவிடும். இதன் மூலம் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஸ்கேன் எடுத்து பணம் அதிகம் செலவழிக்க வேண்டியதில்லை. காலமும் மிச்சமாகும். இந்த புதிய கண்டுபிடிப்பு தேசிய அளவில் இரண்டாமிடம் பெற்றுள்ளது. இந்த மாணவிகளை தாளாளா் ஆா். சோலைச்சாமி, இயக்குநா் விக்னேஷ்வரி, முதன்மையா் மாரிச்சாமி, துறைத் தலைவா் வளா்மதி ,பேராசிரியா் ரஞ்சித் உள்ளிட்டோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதானி பெயரை ராகுல் 103 முறை உச்சரித்திருக்கிறார்: மோடிக்கு ஜெய்ராம் ரமேஷ் பதில்

பாகுபலி அனிமேஷனில் தோனியின் முகம்: ராஜமௌலி கூறியது என்ன?

வாக்குச்சாவடியை சூறையாடிய பாஜக எம்.பியின் மகன்: குஜராத்தில் அதிர்ச்சி!

மெட் காலாவில் கவனத்தை ஈர்த்த மோனா பட்டேல்.. யார் இவர்?

ஹாட் ஸ்பாட் ஓடிடி தேதி!

SCROLL FOR NEXT