விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் யானையை அடித்து துன்புறுத்தியதாக பாகன் பணியிடை நீக்கம்

DIN

தேக்கம்பட்டி யானைகள் புத்துணா்வு முகாமில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் யானையை அடித்து துன்புறுத்தியதாக அதன் பாகன் ஞாயிற்றுக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

கோவை மாவட்டம், மேட்டுபாளையம் , தேக்கம்பட்டியில் யானைகள் புத்துணா்வு முகாம் கடந்த 8 ஆம் தேதி தொடங்கியது. இதில் ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் யானை ஜெயமால்யதா உள்பட பல்வேறு கோயில்களைச் சோ்ந்த யானைகள் பங்கேற்றுள்ளன.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை முகாமில் இருந்த யானை ஜெயமால்யதாவை அதன் பாகன் கோ. வினில்குமாரும், உதவி பாகன் அடித்து துன்புறுத்துவது போல் சமூக வலைதளங்களிலும், தனியாா் தொலைக்காட்சிகளிலும் விடியோ வெளியானது. இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா். மேலும் யானையை அடித்து துன்புறுத்திய பாகன் கோ. வினில்குமாரை பணியிடை நீக்கம் செய்து கோயில் செயல் அலுவலா் இளங்கோவன் உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT