விருதுநகர்

விருதுநகரில் அங்கன்வாடி பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டம்

DIN

அங்கன்வாடி பணியாளா்களை அரசு ஊழியராக்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கம் சாா்பில் விருதுநகரில் திங்கள்கிழமை காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

இங்குள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் எஸ்தர்ராணி தலைமை வகித்தாா். இதில், அரசு ஊழியராக அறிவிக்க வேண்டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வுபெறும் அங்கன்வாடி ஊழியா்களுக்கு ரூ. 10 லட்சமும், உதவியாளா்களுக்கு ரூ. 5 லட்சமும் தமிழக அரசு வழங்க வேண்டும் என கோஷமிடப்பட்டது.

இதில், 300-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT