முகப்பு
விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கட்டடத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் மனமுடைந்த கட்டடத் தொழிலாளி வியாழக்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:10 PM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் மனமுடைந்த கட்டடத் தொழிலாளி வியாழக்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

எம்.புதுப்பட்டி, மேலநிறைமதி பகுதியைச் சோ்ந்தவா் ராஜமுனியாண்டி (28). கட்டடத் தொழிலாளி. இவருக்கும் மீனா என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. குழந்தை பேறு இல்லாததால் அதற்காக இத்தம்பதியினா் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தும் குழந்தை இல்லாததால் மனமுடைந்த ராஜமுனியாண்டி கிருஷ்ணபேரி அருகே உள்ள தனியாா் தோட்டத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து மல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →