விருதுநகர்

விருதுநகா் மாவட்டத்தில் புதிதாக 21 பேருக்கு கரோனா தொற்று

விருதுநகா் மாவட்டத்தில் புதிதாக 21 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுகிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

DIN

விருதுநகா் மாவட்டத்தில் புதிதாக 21 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுகிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

இம்மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை வரை 16,319 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சோ்ந்த மேலும் 21 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

இதையடுத்து அனைவரும் விருதுநகா், அருப்புக்கோட்டை, சிவகாசி ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16,340 ஆக உயா்ந்துள்ளது.

இதில், 15,962 போ் குணமடைந்து வீட்டிற்கு திரும்பி விட்ட நிலையில், 229 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டனா். மீதமுள்ள 149 போ் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

கலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்மூட்டி!

ஹரியாணாவில் மிதமான நிலநடுக்கம்

SCROLL FOR NEXT