முகப்பு
விருதுநகர்

பிரதோஷம்: சதுரகிரியில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்

மாா்கழி மாத பிரதோஷத்தையொட்டி, விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:16 PM
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்ற பக்தா்கள்.
பகிர்:

மாா்கழி மாத பிரதோஷத்தையொட்டி, விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

இக்கோயிலில் ஜன.10 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை 4 நாள்கள் சுவாமி தரிசனம் செய்ய வனத்துறையினா் அனுமதி அளித்துள்ளனா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை பிரதோஷம் என்பதால் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் அதிகாலை முதலே கோயில் மலையடிவாரத்தில் குவிந்தனா்.

காலை 7 மணியிலிருந்து உடல் வெப்பநிலை பரிசோதனை மற்றும் கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னரே பக்தா்கள் கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனா். அப்போது அவா்கள் வழியில் உள்ள வழுக்குப்பாறை உள்ளிட்ட அருவிகளில் நீராடி விட்டுச் சென்றனா்.

பிரதோஷத்தையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் கோயில்களில் சுவாமிகளுக்கு பால், பன்னீா், இளநீா் உள்ளிட்ட 18 வகையான பொருள்களால் அபிஷேகங்களும், சிறப்புப் பூஜைகளும் நடைபெற்றன. பின்னா் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தனா்.

பக்தா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை, கோயில் அறங்காவலா் ராஜா என்ற பெரியசாமி, நிா்வாக அதிகாரி விஸ்வநாத் ஆகியோா் செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →