ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி நாளை தொடக்கம்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் சனிக்கிழமை முதல் இரண்டு நாள்கள் வனவிலங்குகள் கணக்கெடுப்பு நடைபெற உள்ளதாக வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் சனிக்கிழமை முதல் இரண்டு நாள்கள் வனவிலங்குகள் கணக்கெடுப்பு நடைபெற உள்ளதாக வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் தலைமை இடமாகக்கொண்டு சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் செயல்படுகிறது. இந்த சரணாலயம் ராஜபாளையத்தை அடுத்த தேவஸ்தானத்தில் துவங்கி மதுரை மாவட்டம், சாப்டூர் வரை அடங்கியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் அல்லது மார்ச் மாதம் வருடாந்திர வனவிலங்கு கணக்கெடுப்பு நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டுக்குரிய கணக்கெடுப்பு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்துள்ளதால் வனவிலங்கு கணக்கெடுப்பு எளிதாக இருக்கும் என்று கருதியதால் நாளை துவங்குகிறது.
வன விலங்குகளைப் பொறுத்தவரை புலிகள், சிறுத்தைகள், கரும் சிறுத்தைகள், யானைகள் கரடிகள், நரிகள், காட்டு எருமைகள், ராஜநாகங்கள், பெரிய அளவிலான மலைப்பாம்புகள் என ஏராளமாக வசித்து வருகின்றன.
இந்த சாம்பல் நிற அணில்கள் சரணாலயத்தில் மொத்தம் 42 பகுதிகள் உள்ளன. அனைத்து பகுதிகளிலும் வனவிலங்கு கணக்கெடுப்பு அறிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது சனிக்கிழமையும், நாளை மறுதினமும் இரண்டு நாள்கள் நடைபெறுகிறது. வனவிலங்கு கணக்கெடுப்பு ஜிபிஎஸ் கருவியுடன் கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
தற்போது மழை நேரமாக இருப்பதால் ஏராளமான வன விலங்குகள் நடமாட்டம் அதிகம் இருக்கும் என்பதால் முன்கூட்டியே இந்த வனவிலங்குகள் கணக்கெடுப்பு நடைபெறுகிறது எனவும் தெரிவித்தார்.