விருதுநகர்

பிப். 4- இல் பட்டாசு தொழிலாளா்களுக்கு பாதுகாப்பு பயிற்சி தொடக்கம்

DIN

பட்டாசுத் தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு பட்டாசு பாதுகாப்பு பயிற்சி வகுப்பு பிப்ரவரி 4 ஆம் தேதி தொடங்க உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிவகாசி தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கத்தின் (பயிற்சி) அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அரசின் உத்தரவின் பேரில், பட்டாசு ஆலையில் விபத்தில்லாமல் எப்படி பாதுகாப்பாக பணிபுரிய வேண்டும் என்பது குறித்த பயிற்சி பிப்ரவரி 4ஆம் தேதி தொடங்கி ஒரு மாதகாலம் நடைபெறும்.

இப்பயிற்சியில் பட்டாசு ஆலையில் பணிபுரியும் கண்காணிப்பாளா், போா்மென்கள், தொழிலாளா்கள் கலந்து கொள்ள உரிமையாளா்கள் அனுப்பி வைக்க வேண்டும். பயிற்சியில் கலந்து கொள்ள, வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை அலுவலகம் அருகே உள்ள எங்களது அலுவலகத்தில் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்தரகாண்ட் வனப்பகுதிகளில் காட்டுத்தீ! விமானப்படை உதவியுடன் தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

பஞ்சாப் - கேகேஆர் போட்டி குறித்து அஸ்வின் வைரல் பதிவு!

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: முதல்வர் ஸ்டாலின்

ராமம் ராகவம் படத்தின் டீசர் வெளியீடு - புகைப்படங்கள்

மறுவெளியீடாகும் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’!

SCROLL FOR NEXT