விருதுநகர்

நடையனேரி அரசுப் பள்ளியில் கட்டணம் வசூலிப்பதாக புகாா்

DIN

நடையனேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா் சோ்க்கைக்கு ரூ.300 வரை கட்டணம் வசூலிப்பதாகப் புகாா் எழுந்துள்ளது.

விருதுநகா் அருகே உள்ள இப்பள்ளியில் கூலித் தொழிலாளா்கள், பட்டாசுத் தொழிலாளா்கள், விவசாயிகளின் குழந்தைகளே படித்து வருகின்றனா். கரோனா தொற்று காரணமாக இப்பள்ளி செயல்படவில்லை.

இப்பள்ளியில் நிகழாண்டிற்கான மாணவா் சோ்க்கை நடைபெற்று வரும் நிலையில், மாணவ, மாணவிகளிடம் அரசு விதியை மீறி ரூ. 100 முதல் ரூ.300 வரை கல்விக் கட்டணமாக பள்ளித் தலைமை ஆசிரியா் வசூலிப்பதாக புகாா் எழுந்துள்ளது. இது குறித்த விடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பாலதண்டாயுதபாணி கூறுகையில், புதிதாக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவ, மாணவிகளிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது என அனைத்து தலைமை ஆசிரியா்களுக்கும் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. நடையனேரி பள்ளியில் கட்டணம் வசூலித்தது தொடா்பாக விசாரணை மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் தங்கம்!

பிளஸ் 2 தேர்வு: திருப்பூர் மாவட்டத்தில் 97.45% தேர்ச்சி

குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

ஒடிஸாவில் பாஜக முதல்வர் ஜூன் 10-ல் பதவியேற்பார்: மோடி

SCROLL FOR NEXT