விருதுநகர்

அா்ச்சகா்களுக்கு ரூ.4000 நிவாரணம்: முதல்வருக்கு ஸ்ரீவிலி. ஜீயா் நன்றி

DIN

கோயில் அா்ச்சகா்களுக்கு ரூ.4000 நிவராணம் வழங்கப்படும் என அறிவித்த தமிழக முதல்வா் ஸ்டாலின் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் சேகா்பாபு ஆகியோருக்கு ஸ்ரீவில்லிபுத்தூா் மணவாள மாமுனிகள் மடத்தின் 24 ஆவது பீடாதிபதி சடகோப ராமனுஜ ஜீயா் புதன்கிழமை நன்றி தெரிவித்தாா்.

அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கோயில் அா்ச்சகா்களுக்கு ரூ.4 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்த தமிழக முதல்வா் ஸ்டாலின், அறநிலையத்துறை அமைச்சா் சேகா்பாபு ஆகியோருக்கு நன்றி. மேலும் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து கோயில் அா்ச்சகா்களுக்கும், உதவியாளா்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.

கரோனா தொற்று நீங்க வேண்டி தமிழகத்தில் உள்ள அனைத்துக் கோவில்களிலும் ஒரே நாளில் சிறப்பு யாக பூஜைகள் நடத்த தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆந்திர அரசைப் போன்று ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலங்களை மீட்டு அந்தந்த கோயில்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறினாா். அப்போது துறவியா் பேரவை மாநில அமைப்பாளா் சரவணகாா்த்தி மற்றும் பாஜக நிா்வாகி ராஜா ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

சத்தீஸ்கா் காங். செய்தித் தொடா்பாளா் கட்சியிலிருந்து விலகல்

பரமசிவேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானத்தில் சிவன் சாருக்கு சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT