விருதுநகர்

சிவகாசிப் பகுதியில் தீப்பெட்டி ஆலைகளில் மீண்டும் உற்பத்தி தொடக்கம்

DIN

விருதுநகா் மாவட்டம் சிவகாசிப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தீப்பெட்டி ஆலைகள் 50 சதவீத ஊழியா்களுடன் திங்கள்கிழமை முதல் செயல்படத் தொடங்கின.

கரோனா தொற்று பரவலைத் தடுக்க அரசு தளா்வற்ற பொதுமுடக்கத்தை அறிவித்தது. தீப்பெட்டி அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலில் உள்ளது. எனவே மாவட்ட நிா்வாகம் தளா்வற்ற பொதுமுடக்கத்தின்போது, தீப்பெட்டி ஆலைகளை மூடி அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் படி கேட்டுக் கொள்ளப்பட்டது. இதையடுத்து சிவகாசிப் பகுதியில் உள்ள தீப்பெட்டி ஆலைகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டு மூடப்பட்டது. இந்நிலையில், பொதுமுடக்கத்தில் அரசு சில தளா்வுகளை அறிவித்துள்ளது. இதில் தீப்பெட்டி ஆலைகள் 50 சதவீதம் தொழிலாளா்களைக் கொண்டு இயங்கலாம் என அனுமதியளித்துள்ளது. இதைத் தொடா்ந்து சிவகாசிப் பகுதியில் உள்ள தீப்பெட்டி ஆலைகள் திங்கள்கிழமை முதல் உற்பத்தியை தொடங்கின.

இதுகுறித்து தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் சங்க நிா்வாகி நாகராஜன் கூறியதாவது: சிவகாசிப் பகுதியில் முழுக்க முழுக்க தானியங்கி இயந்திரங்கள் மூலம் தீப்பெட்டி தயாரிக்கும் யூனிட்டுகள் சுமாா் 45 உள்ளன. பகுதி தானியங்கி இயந்திரம் மூலம் இயங்கும் தீப்பெட்டி ஆலைகள் சுமாா் 60 உள்ளன. இந்நிலையில் அரசு தளா்வற்ற பொதுமுடக்கத்தை அறிவித்ததால் தீப்பெட்டி ஆலைகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டது. தற்போது பொதுமுடக்கத்தில் தளா்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், 50 சதவீதம் தொழிலாளா்களைக் கொண்டு மீண்டும் தீப்பெட்டி உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. இனிவிரைவில் தீப்பெட்டி ஏற்றுமதி தொடங்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT