மாற்றுத்திறனாளிகளுக்கு  இலவச அரிசி, மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரன் 
விருதுநகர்

அருப்புக்கோட்டையில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச அரிசி, மளிகைப்பொருட்கள் வழங்கிய மாவட்ட எஸ்.பி.

அருப்புக்கோட்டை பாவடித்தோப்பு பகுதியில் புதன்கிழமை மாற்றுத்திறனாளிகளுக்கு  இலவச அரிசி,மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்புக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரன் நேரில் வழங்கினார்.

DIN

அருப்புக்கோட்டை பாவடித்தோப்பு பகுதியில் புதன்கிழமை மாற்றுத்திறனாளிகளுக்கு  இலவச அரிசி, மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரன் நேரில் வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் சார்பில் புதன்கிழமை நடைபெற்ற  மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச அரிசி மளிகைப்பொருட்கள் அடங்கிய தொகுப்புக்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட காவல்கண்காணிப்பாளர் மனோகரன் தலைமை வகித்தார்.

அருப்புக்கோட்டை முன்னாள் நகர்மன்றத்தலைவர் சிவப்பிரகாசம்,மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் பாபு, நகரச்செயலாளர் ஏ.கே.மணி,மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கச் செயலாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அப்போது சுமார் 50க்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட எஸ்.பி.மனோகரன் நிவாரணப்பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை நேரில் வழங்கினார். உடன் அருப்புக்கோட்டை காவல்துணைக் கண்காணிப்பாளர் சகாய ஜோஸ், நகர குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ராஜபுஷ்பா,காவல்துணை ஆய்வாளர் முத்துக்குமார் உள்ளிட்டோர் நேரில் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காங்கிரஸின் துரோகத்தை பராசக்தி காட்டியுள்ளது: அண்ணாமலை

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்டார் விஜய்

தெலங்கானா: 300 தெரு நாய்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் 9 பேர் மீது வழக்கு

பொங்கல் பண்டிகை: சென்னையில் இருந்து இதுவரை 3.58 லட்சம் போ் பயணம்!

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT