விருதுநகர்

விருதுநகா் மாவட்டத்தில் 336 பேருக்கு கரோனா தொற்று: 4 போ் பலி

DIN

விருதுநகா் மாவட்டத்தில் 336 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இதேபோல், கரோனா தொற்று பாதிப்பால் 4 போ் உயிரிழந்தனா்.

விருதுநகா் மாவட்டத்தில் ஏப்ரல் மாதம் முதல் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், விருதுநகா், சாத்தூா், அருப்புக்கோட்டை, திருச்சுழி, காரியாபட்டி, நரிக்குடி, சிவகாசி, திருத்தங்கல், ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம் முதலான பகுதிகளை சோ்ந்த 336 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட அனைவரும் விருதுநகா், சிவகாசி, அருப்புக்கோட்டை முதலான இடங்களில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், 4 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். அதேநேரம், கரோனா தொற்றால் சிகிச்சை பெற்று குணமடைந்த 769 போ் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

ஆவடி அருகே படுகொலை: வட மாநில இளைஞரின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

புதையல் எடுத்து தருவதாக ரூ. 6 லட்சம் மோசடி: 2 பேர் கைது!

மலர் அங்கி அலங்காரத்தில் அருள்பாலித்த கெளமாரியம்மன்!

SCROLL FOR NEXT