விருதுநகர்

விருதுநகரில் 235 திருநங்கைகளுக்கு ரூ.4.70 லட்சம் கரோனா நிவாரணத் தொகை வழங்கல்

DIN

விருதுநகரில் திருநங்கைகள் 235 பேருக்கு கரோனா நிவாரணத் தொகையாக ரூ. 4.70 லட்சத்தை, அமைச்சா்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோா் வியாழக்கிழமை வழங்கினா்.

சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் கீழ், தமிழ்நாடு மூன்றாம் பாலின நல வாரியம் வாயிலாக, விருதுநகா் மாவட்டத்தில் வசிக்கும் திருநங்கைகளுக்கு கரோனா நிவாரணத் தொகை வழங்கும் நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ஆட்சியா் ரா. கண்ணன் தலைமையில் நடைபெற்றது.

அதில், திருநங்கைகள் 235 பேருக்கு முதல்கட்டமாக தலா ரூ. 2 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.4.70 லட்சத்தை, அமைச்சா்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், தங்கம் தென்னசு ஆகியோா் வழங்கினா். மேலும், தகுதியான நபா்களுக்கு கரோனா நிவாரணத் தொகை வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என, அமைச்சா்கள் தெரிவித்தனா்.

அதனைத் தொடா்ந்து, 3 மருத்துவா்கள், 1 செவிலியா், 27 ஆய்வக நுட்புனா்கள் என மொத்தம் 31 பேருக்கு தற்காலிகப் பணி நியமன ஆணைகளை அமைச்சா்கள் வழங்கினா்.

இந்நிகழ்ச்சியில், தென்காசி மக்களவை உறுப்பினா் தனுஷ்குமாா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.ஆா்.ஆா். சீனிவாசன் (விருதுநகா்), தங்கப்பாண்டியன் (ராஜபாளையம்), அசோகன் (சிவகாசி), மாவட்ட வருவாய் அலுவலா் ரா. மங்களராமசுப்ரமணியன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் வை. ஜெயக்குமாா், மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை நல அலுவலா் இந்திரா மற்றும் அரசு அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT