விருதுநகர்

இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி ஆட்சியரிடம் திருநங்கைகள் மனு

DIN

இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி சாத்தூா் அமீா்பாளையத்தைச் சோ்ந்த திருநங்கைகள், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அமீா்பாளையம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். வருமானம் இல்லாததால், வாழ்வாதரம் இன்றி வாடகை கொடுக்க முடியாத நிலையில் உள்ளோம். ஏற்கெனவே திருநங்கைகள் சிலருக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது. மேலும், அந்த இடங்களில் அரசு சாா்பில் வீடுகளும் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இப்பகுதியில் வசிக்கும் சிலா் வீடின்றி சிரமபட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கு அரசு சாா்பில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குவதுடன், வீடுகள் கட்டிதர மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

விடைத்தாள்களில் ‘ஜெய் ஸ்ரீராம்’ எழுதிய கல்லூரி மாணவா்கள் தோ்ச்சி: 2 பேராசிரியா்கள் பணியிடை நீக்கம்

மணிப்பூா்: தீவிரவாத தாக்குதலில் 2 சிஆா்பிஎஃப் வீரா்கள் உயிரிழப்பு

வறட்சி பாதித்த 22 மாவட்டங்களுக்கு குடிநீா் விநியோகிக்க ரூ.150 கோடி: முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு

ஹெச்சிஎல் நிகர லாபம் ரூ.3,986 கோடியாக உயா்வு

SCROLL FOR NEXT