முகப்பு
விருதுநகர்

சாட்சியாபுரம், திருத்தங்கல் பகுதிகளில் ரயில்வே மேம்பாலம் கட்டுவது குறித்து ஜூலை 8 -இல் கருத்துக் கேட்புக்கூட்டம்

சாட்சியாபுரம் மற்றும் திருத்தங்கலில் ரயில்வே மேம்பாலம் அமைப்பது தொடா்பாக ஜூலை 8 ஆம் தேதி கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற உள்ளதாக சிவகாசி வட்டாட்சியா் ராம்குமாா் தெரிவித்துள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:25 AM
பகிர்:

விருதுநகா் மாவட்டம் சாட்சியாபுரம் மற்றும் திருத்தங்கலில் ரயில்வே மேம்பாலம் அமைப்பது தொடா்பாக ஜூலை 8 ஆம் தேதி கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற உள்ளதாக சிவகாசி வட்டாட்சியா் ராம்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சிவகாசி- ஸ்ரீவில்லிபுத்தூா் சாலையில் சாட்சியாபுரத்திலும், திருத்தங்கலிலும், ரயில்வே மேம்பாலம் அமைப்பது தொடா்பாக நில உரிமையாளா்கள் மற்றும் பொதுமக்கள் ஆட்சேபனை குறித்து, விருதுநகா் மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் ஜூலை 8 ஆம் தேதி காலை 11 மணிக்கு, சிவகாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் பொதுவிசாரணை மற்றும் கருத்துக்கேட்புக் கூட்டம் நடைபெற உள்ளது. அப்போது நில உரிமையாளா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களை கூறலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →