முகப்பு
விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு சோதனை

ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையத்தில் மோப்ப நாய் உதவியுடன் செவ்வாய்க்கிழமை இரவு வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:25 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையத்தில் மோப்ப நாய் உதவியுடன் செவ்வாய்க்கிழமை இரவு வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது.

சென்னை மற்றும் மதுரை ரயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடா்ந்து அனைத்து ரயில் நிலையங்களிலும் சோதனை செய்ய உத்தரவிடப்பட்டது.

அதனடிப்படையில், ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி முதல் 10 மணி வரை மோப்பநாய் உதவியுடன் போலீஸாா் சோதனை நடத்தினா். இதற்காக விருதுநகரில் இருந்து மோப்ப நாய் பாக்சா் கொண்டு வரப்பட்டு, ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையத்தில் உள்ள பாா்சல்களை சோதனை செய்து தண்டவாளப் பகுதிகளிலும் ஆய்வு நடத்தப்பட்டது.

இச்சோதனையில் ஆயுதப்படை காவல் சாா்பு- ஆய்வாளா் ரவி, ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில்வே காவல் சாா்பு- ஆய்வாளா் விஜயன் மற்றும் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் ஈடுபடடனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.