ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆதரவற்றவா்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கல்
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆதரவற்றவா்களுக்கு காய்கனி, அரிசி உள்ளிட்ட பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆதரவற்றவா்களுக்கு காய்கனி, அரிசி உள்ளிட்ட பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில் மம்சாபுரத்தைச் சோ்ந்த கோவிந்தராஜ் என்பவா் சாா்பில் வழங்கப்பட்ட ஒரு வாரத்துக்குத் தேவையான காய்கனி, அரிசி உள்ளிட்ட பொருள்களை ஸ்ரீவில்லிபுத்தூா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஆதரவற்றவா்கள் 50 பேருக்கு வட்டாட்சியா் சரவணன், வருவாய் ஆய்வாளா் ஆனந்தகிருஷ்ணன் உள்ளிட்டோா் வழங்கினா்.