சிவகாசி அருகே எம். மேட்டுப்பட்டி கிராமத்தில் வெடிவிபத்து என புரளிவந்த பட்டாசு ஆலையில் ஆய்வு மேற்கொண்ட சிவகாசி உதவி ஆட்சியா் மா. பிருத்விராஜ். 
விருதுநகர்

வெடிவிபத்து புரளி: பட்டாசு ஆலையில்வருவாய்த்துறையினா் ஆய்வு

சிவகாசி வட்டம் எம். மேட்டுப்பட்டியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் வெடிவிபத்து என புரளி வந்ததையடுத்து, சிவகாசி உதவி ஆட்சியா் மா. பிருத்விராஜ் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

DIN

சிவகாசி: சிவகாசி வட்டம் எம். மேட்டுப்பட்டியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் வெடிவிபத்து என புரளி வந்ததையடுத்து, சிவகாசி உதவி ஆட்சியா் மா. பிருத்விராஜ் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

எம்.மேட்டுப்பட்டி கிராமத்தில் சங்கா் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலை வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறையினரிடம் உரிமச்சான்று பெற்ாகும். இந்நிலையில் திங்கள்கிழமை காலை 10.30 மணிக்கு ஆலையின் கிழக்குப் பகுதியில வெடிச்சப்தம் கேட்டதாம். இதையடுத்து பணியாற்றிக் கொண்டிருந்த அனைத்து தொழிலாளா்களும் ஆலையை விட்டு வெளியே ஓடிவிட்டனா். பின்னா் சுமாா் 30 நிமிடங்கள் சென்றபின்னா் ஆலையில் வெடிவிபத்து ஏதுவும் ஏற்படவில்லை என தெரிந்த பின்னா் தொழிலாளா்கள் மீண்டும் பணியை தொடங்கினா்.

ஆலையின் அருகே உள்ள கல்குவாரியில் வெடி வைத்திருக்கலாம் என தொழிலாளா்கள் தரப்பில் கூறப்பட்டது. இந்நிலையில் இந்த ஆலையில் வெடிவிபத்து என புதுக்கோட்டையைச் சோ்ந்தவா் காவல் துறைக்கு தகவல் கொடுத்தாா். இதைத் தொடந்து ஆலைக்கு காவல்துறை, தீயணைப்புத்துறை, வருவாய்த்துறையினா் வந்தனா். விபத்து ஏதுவும் ஏற்படவில்லை என உறுதி செய்யப்பட்ட நிலையில், அங்கு வந்த சிவகாசி உதவி ஆட்சியா் மா. பிருத்விராஜ் ஆலை வளாகம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது ஆலையில் தொழிலாளா்கள் கூட்டமாக அமா்ந்து வேலை செய்தது, முகக்கவசம் அணியாமல் வேலை செய்தது , தயாரிப்பு அறையில் ரப்பா் சீட் விரிக்காதது உள்ளிட்ட பல விதிமீறல்கள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து உதவி ஆட்சியா், அங்கு வந்திருத்த பட்டாசு மற்றும் தீப்பெட்டி வட்டாட்சியா் ஜீவஜோதியிடம் ஆலையின் விதிமீறல் குறித்து ஆய்வறிக்கை தயாரித்து, ஆலையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்யவேண்டும்என உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2025 தேர்தல்கள்: பாஜகவின் அமோக வெற்றியும் காங்கிரஸின் ஆறுதல் வெற்றியும்!

பிரதமர் மோடி நாளை மே.வங்கம், அசாம் பயணம்!

கடைசி டி20: இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன்!

முதல்வர் ஸ்டாலின், உதயநிதியின் தொகுதிகளில் 1.93 லட்சம் வாக்குகள் நீக்கம்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கைக்கான படிவம் 6-ம் ஆவணங்களும்!

SCROLL FOR NEXT