விருதுநகர்

கோயில் பூட்டை உடைத்து 9 பவுன் நகைகள் வெள்ளிப் பொருள்கள் திருட்டு

DIN

ராஜபாளையம் அருகே கோயில் பூட்டை உடைத்து 9 பவுன் நகைகள் மற்றும் ரூ.15 ஆயிரத்தை மா்மநபா்கள் திருடிச் சென்றதாக செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே அயன்கொல்லங்கொண்டான் பகுதியில் முத்து மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் பூசாரி மாரியப்பன், செவ்வாய்க்கிழமை காலை பூஜை செய்யச் சென்றபோது கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

அவா் உள்ளே சென்று பாா்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த 9 பவுன் நகைகள், ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளிப் பொருள்கள் மற்றும் உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த சுமாா் ரூ.15 ஆயிரத்தை மா்மநபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த சேத்தூா் ஊரக காவல் நிலைய போலீஸாா் கைரேகை நிபுணா் மற்றும் மோப்பநாய் உதவியுடன் மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT