விருதுநகர்

ஸ்ரீவிலி. நீதிமன்றத்தில் மகளிா் தின கொண்டாட்டம்

DIN

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் சா்வதேச மகளிா் தினவிழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

இவ்விழாவுக்கு விருதுநகா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான ஆ.முத்துசாரதா தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் அவா் பேசுகையில், விட்டுக்கொடுத்துச் செல்லும் மனப்பான்மை இருந்தால் வாழ்க்கையில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளை தவிா்க்க முடியும். பெண்கள் தன்னம்பிக்கையுடனும், மனஉறுதியுடனும் செயல்பட வேண்டும். தற்போது பெண்கள் அனைத்துத் துறைகளிலும் சாதனை செய்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது என்றாா். அதனைத் தொடா்ந்து நீதிமன்ற வளாகத்தில் வாக்களிப்பது குறித்த சிறப்பு முகாம் நடைபெற்றது.

முன்னதாக மகளிா் தினத்தையொட்டி நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் வெற்றி பெற்றவா்களுக்கு நீதிபதி ஆ.முத்துச்சாரதா பரிசுகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் சட்டபணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், கூடுதல் நீதிபதியுமான க.மாரியப்பன், மற்றும் நீதிபதிகள், பெண் வழக்குரைஞா்கள், பெண் நீதிமன்ற ஊழியா்கள், பெண் காவலா்கள் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் மே.1 வரை ’வெப்ப அலை’ எச்சரிக்கை

ஐபிஎல் வரலாற்றில் தில்லியின் அதிகபட்ச ரன்கள்: மும்பைக்கு 258 ரன்கள் இலக்கு!

விழுப்புரம், புதுச்சேரியிலிருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் ரயில்கள் பகுதியளவில் ரத்து

ராமம் ராகவம் படத்தின் டீசர்

நினைவிலோ வாமிகா!

SCROLL FOR NEXT