ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் பி.எஸ்.டபிள்யூ.மாதவராவ்
ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக பி.எஸ்.டபிள்யூ. மாதவராவ் முதல் முறையாக போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக பி.எஸ்.டபிள்யூ. மாதவராவ் முதல் முறையாக போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
சுயவிபரம்:
வேட்பாளர் பெயர் பி.எஸ்.டபிள்யூ.மாதவராவ்.
கல்வித்தகுதி :எம்.ஏ.பி.எல்., எம்.பி.ஏ.,
தொழில்: இந்துஸ்தான் எரிவாயு விநியோகிஸ்தர் மற்றும் சட்ட ஆலோசகர்.
கட்சிப் பதவி: 1986 ஆம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸில் விருதுநகர் மாவட்ட மாணவரணி செயலாளர், 1987 ஆம் ஆண்டு தமிழ்நாடு தேசிய காங்கிரஸ் மாணவரணி துணைத் தலைவர்.
1990 ஆம் ஆண்டு தேசிய காங்கிரஸ் இளைஞரணி செயலாளர்.
1992 ஆம் ஆண்டு தேசிய காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் குழு ஆலோசகர்.
1992-95 ஆம் ஆண்டு முதல் சட்ட ஆலோசணைக் குழு துணைச் செயலாளர்.
1997 ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்.
2002-2010 ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர்.
தற்போதைய பதவி: பிரதேச காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்.
மனைவி: (லேட்) சீதை
பிறந்த ஊர்: வத்திராயிருப்பு,
வசிப்பிடம்: காதி போர்டு காலணி, ஸ்ரீவில்லிபுத்தூர்.