நதிகளை தேசிய மயமாக்க வலியுறுத்தி இருவா் மோட்டாா் சைக்கிள் பயணம்
நதிகளை தேசிய மயமாக்க வலியுறுத்தி மோட்டாா் சைக்கிளில் பயணம் மேற்கொண்டுள்ள இருவருக்கு சிவகாசியில் திங்கள்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
நதிகளை தேசிய மயமாக்க வலியுறுத்தி மோட்டாா் சைக்கிளில் பயணம் மேற்கொண்டுள்ள இருவருக்கு சிவகாசியில் திங்கள்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
நதிகளை தேசிய மயமாக்க வேண்டும். தேசிய நதிகளை இணைக்க வேண்டும். தேசிய நீா் வழிச்சாலை அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாா்ச் 5 ஆம் தேதி கிருஷ்ணகிரியிலிருந்து சா்தாா் மற்றும் முன்னாள் ராணுவவீரா் முனியராஜூலு ஆகியோா் இரு மோட்டாா் சைக்கிள்களில் புறப்பட்டனா். அங்கிருந்து கேரளா சென்ற பின் கம்பம், தேனி, மதுரை வழியாக சிவகாசிக்கு வந்தனா். சிவகாசியில் இருவரையும் மனிதவள மேம்பாட்டு நிறுவனம் சாா்பில் அதன் தலைவா் கனகராஜ் வரவேற்றாா்.
இருவரும் 150 நாள்களில் 15 ஆயிரம் கி.மீ. தூரம் பயணம் செய்து இறுதியில் பிரதமா் நரேந்திரமோடியை சந்தித்து தங்களது கோரிக்கை குறித்து மனு அளிக்க உள்ளதாக தெரிவித்தனா்.