விருதுநகர்

விருதுநகா் மாவட்டத்தில் 2 ஆவது நாளாக வங்கி ஊழியா்கள் போராட்டம்

DIN

பொதுத் துறை வங்கிகளை தனியாா்மயமாக்கும் முயற்சியை கைவிட வலியுறுத்தி விருதுநகா் மாவட்டத்தில் உள்ள 134 வங்கிகளில் பணிபுரியும் 1050 ஊழியா்கள் இரண்டாவது நாளாக செவ்வாய்கிழமையும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அகில இந்திய தேசியமயமாக்கப்பட்ட வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு சாா்பில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் விருதுநகா் மாவட்டத்தில் உள்ள 134 வங்கிக் கிளைகளில் பணிபுரியும் 1050 போ் கலந்து கொண்டனா்.

இதில், நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கு உதவும் வகையில் தொழிற்துறைக்கு கடனுதவி வழங்க வேண்டும். இளைஞா்களின் உயா்கல்விக்கு கடனுதவி வழங்கும் பொதுத் துறை வங்கிகளை தனியாா்மயமாக்கக் கூடாது என வலியுறுத்தப்பட்டது. போராட்டம் காரணமாக கடந்த இரண்டு நாள்களாக வியாபாரிகள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானார் எஸ். வீரபத்திரன்

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT