ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் திருக்கல்யாணத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செப்பு தேரோட்டம். 
விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் செப்பு தேரோட்டம் 

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் திருக்கல்யாணத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை செப்பு தேரோட்டம் நடைபெற்றது.

DIN

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் திருக்கல்யாணத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை செப்பு தேரோட்டம் நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் திருக்கல்யாண விழா கடந்த 20-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதைத்தொடர்ந்து தினமும் ஆண்டாள் ரங்கமன்னார் சர்வ அலங்காரத்தில் காட்சி அளித்தனர். பல்வேறு மண்டபங்களில் எழுந்தருளி உள்ளனர். இந் நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் இன்று மாலை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் முன்புள்ள திருஆடிபூர கொட்டகையில் வைத்து நடைபெறுகிறது. 

இதை தொடர்ந்து இன்று காலை செப்பு தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக காலை ஆண்டாள் ரங்கமன்னார் கோயிலில் இருந்து மேளதாளம் முழங்க கோயில் அருகே உள்ள செப்பு தேர் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டனர். பின்னர் செப்பு தேரில் ஆண்டாளுக்கும் ரெங்கமன்னாருக்கும் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதை தொடர்ந்து செப்பு தேரோட்டம் இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு கோவிந்தா கோபாலா என்ற கோஷம் எழுப்பியபடியே தேரை இழுத்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் ஆய்வாளர் வினோதா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். ஆண்டாள் செப்பு தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன் நிர்வாக அதிகாரி இளங்கோவன் மற்றும் கோயில் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காலங்களில் அவள் வசந்தம்... காவ்யா அறிவுமணி!

இரவில் சென்னை, 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

அடி அலையே பாடல் ப்ரொமோ வெளியீடு!

இந்திய வீராங்கனைகள் ரேணுகா சிங், கிராந்தி கௌடுக்கு தலா ரூ. 1 கோடி பரிசு!

அமெரிக்க முன்னாள் துணை அதிபர் காலமானார்

SCROLL FOR NEXT