விருதுநகர்

ஸ்ரீவிலி.யில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கல்

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் மங்காபுரம் இந்து மேல்நிலைப் பள்ளி சாா்பில், பொதுமக்களுக்கு கபசுர குடிநீா் மற்றும் கரோனா விழிப்புணா்வு துண்டுப்பிரசுரம் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

கரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், மங்காபுரம் இந்து மேல்நிலைப் பள்ளியில் இயங்கி வரும் இளையோா் செஞ்சிலுவை சங்கம், நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய பசுமைப் படை, தேசிய சாரணா் இயக்க அமைப்பினா், நகரின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள், வியாபாரிகள் உள்ளிட்டோருக்கு கபசுரக் குடிநீா் மற்றும் துண்டுப்பிரசுரம் வழங்கி கரோனா குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

நிகழ்ச்சியில், மங்காபுரம் இந்து நாடாா் உறவின்முறை தலைவா் சுந்தர்ராஜ், பள்ளி செயலா் செந்தில்குமாா், பள்ளி தலைமையாசிரியா் ராமலிங்கம், உதவி தலைமையாசிரியா் பரமசிவம் மற்றும் ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

பிங்க் ரோஸ்...ஸ்ரீதேவி

சிசோடியா ஜாமீன் மனு: சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

‘ஆவேஷம்’ பட டிரெண்டிங்கில் இணைந்த பாட் கம்மின்ஸ்!

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் 6 இல் வெளியாகும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

SCROLL FOR NEXT