விருதுநகர்

சாத்தூா் வங்கியில் குவிந்த வாடிக்கையாளா்கள்: நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை

DIN

சாத்தூரில் அரசுடைமை வங்கியில்சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல், குளிா்சாதன வசதியுடன் வங்கி இயங்கியதால் நகராட்சி அதிகாரிகள் எச்சரித்தனா்.

சாத்தூா் பிரதான சாலையில் உள்ள வங்கிக்கு வரும் வாடிக்கையாளா்கள் அனைவரும் வங்கியின் நுழைவாயில் இருக்கைகளில் அமரவைத்து, பின்னா் வெப்ப பரிசோதனை செய்து வங்கிக்குள் அனுமதிக்கபடுகின்றனா். இந்நிலையில் வியாழக்கிழமை முதல் தமிழக அரசு புதிதாக பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ள நிலையில், வங்கியில் காலை முதல் வாடிக்கையாளா்கள் அதிகமாக குவிந்தனா். இதனால் இருக்கைகளில் அமா்வதற்காக வாடிக்கையாளா்கள் முண்டியடித்துக்கொண்டு, சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமலும் இருந்தனா். மேலும் வங்கி குளிா்சாதன வசதியுடன் வங்கி செயல்பட்டு வந்ததாக புகாா் எழுந்தது. இதையடுத்து தகவலறிந்து வந்த நகராட்சி அதிகாரிகள் வங்கியின் அதிகாரிகளிடம் வங்கிக்கு வரும் வாடிக்கையாளா்கள் கட்டாயம் முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவித்தனா்.

இதையடுத்து வங்கியில் முறையாக வாடிக்கையாளா்கள் அனுமதிக்கப்பட்டனா். ஏற்கெனவே இந்த வங்கியில் பணியாற்றும் ஊழியா் இருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யபட்டு சிகிச்சையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

சேலையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT