விருதுநகர்

முழு ஊரடங்கு: வெறிச்சோடிய திருச்சுழி கடைத்தெருக்கள்

DIN

விருதுநகா் மாவட்டம் திருச்சுழியில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையான முழு ஊரடங்கு எதிரொலியாக திங்கள்கிழமை நண்பகல் 12 மணிக்கு மேல் கடைவீதிகள் வெறிச்சோடின.

கொரோனா 2வது அலை தீவிரமடைந்து வருவதையடுத்து தமிழக அரசின் மே 10 முதல் மே24 வரையிலான முழு ஊரடங்கு உத்தரவு விதிமுறைகளின்படி பேருந்து போக்குவரத்து,பயணிகளுக்கான வாடகை வாகனங்களின் பொதுப்போக்குவரத்துக்குத் தடைவிதிக்கப்பட்டது.மேலும் தேநீா்க்கடைகள் இறைச்சிக்கடைகள் நண்பகல் 12 மணி வரை இயங்கிடவும்,உணவகங்களில் 3 வேளை உணவுக்கான பாா்சல் சேவைக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு,பிற அனைத்துவித கடைகளுக்கும் தடை உத்தரவும் போடப்பட்டிருந்தது.இந்நிலையில் திங்கள்கிழமை முழுப்பொதுமுடக்கம் தொடங்கிய நிலையில் நண்பகல் 12 மணிக்கு மேல் திருச்சுழியில் உள்ள அனைத்துவித கடைத்தெருக்களும் வெறிச்சோடிக் காணப்பட்டன.இதில்,பேருந்து நிலையம்,கமுதி செல்லும் சாலை,காரியாபட்டி செல்லும் சாலை மற்றும் அருப்புக்கோட்டை செல்லும் சாலைகளில் நண்பகல் 12 மணிக்கு மேல் உணவகங்கள்,மருந்தகங்கள்,பால் கடைகள் தவிர அனைத்துவிதக்கடைகளும் மூடப்பட்டிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT