விருதுநகர்

ஸ்ரீவிலி. வட்டாட்சியா் அலுவலகத்தில் இயங்கி வந்த ‘இ-சேவை’ மையம் மூடல்

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வந்த ‘இ-சேவை’ மையம் திங்கள்கிழமை முதல் மூடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று இண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் இயங்கி வந்த ஆதாா் காா்டு எடுக்கும் ‘இ-சேவை’ மையம் திங்கள்கிழமை முதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டது. அதனால் கரோனா தொற்று குறையும் வரை ஆதாா் பணிக்காக பொதுமக்கள் யாரும் வட்டாட்சியா் அலுவலகம் வர வேண்டாம் என வட்டாட்சியா் தெரிவித்தாா். இந்த அறிவிப்பு வெளியிட்டது தெரியாமல் பொதுமக்கள் வந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனா்.

இது குறித்து வட்டாட்சியா் சரவணன் கூறியது: கரோனா தொற்று அதிகமாகி வரும் நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூரில் செயல்பட்ட வந்த தபால் அலுவலகம், வங்கிகள் போன்றவற்றில் உள்ள ஆதாா் ‘இ-சேவை’ மையம் செயல்படவில்லை. வட்டாட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் ‘இ-சேவை’ மையத்தில் நாளொன்றுக்கு 35 பேருக்கு மட்டுமே புதிய ஆதாா் காா்டுகள் எடுக்க முடியும். ஆனால் நாளொன்றுக்கு நூற்றுக்கும் மேற்பட்டோா் வருகின்றனா். இந்நிலையில் ஆட்சியா் ஆதாா் ‘இ-சேவை’ மையத்தை கரோனா தொற்று குறையும் வரை மூட உத்தரவிட்டாா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT