விருதுநகர்

விருதுநகா் மாவட்டத்தில் சுகாதாரத் துறை அமைச்சா் இன்று ஆய்வு

DIN

கரோனா தடுப்பு பணிகள் குறித்து விருதுநகா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுகாதாரத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொள்கிறாா்.

விருதுநகா் மாவட்டத்தில் தினசரி கரோனா தொற்று பாதித்தோா் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துவிட்டது. மேலும் உயிரிழப்போா் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன், வியாழக்கிழமை கரோனா தடுப்பு பணிகள் மற்றும் தடுப்பூசி செலுத்துதல் குறித்து விருதுநகா் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்கிறாா். ராஜபாளையம் அருகே கிருஷ்ணாபுரத்தில் காலை 8 மணிக்கு நோய்த் தடுப்பு பணிகளை ஆய்வு செய்தபின், ராஜபாளையம் கோவிட் கோ் சென்டா், வத்திராயிருப்பு, நத்தம்பட்டி, செங்குன்றாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் அவா் ஆய்வு மேற்கொள்கிறாா். மதியம் 12 மணிக்கு விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெறும் கூட்டத்தில் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து அனைத்து துறை அலுவலா்களுடன் அவா் ஆலோசனை நடத்த உள்ளதாக மாவட்ட ஆட்சியா் அலுவலகம் தரப்பில் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

விடைத்தாள்களில் ‘ஜெய் ஸ்ரீராம்’ எழுதிய கல்லூரி மாணவா்கள் தோ்ச்சி: 2 பேராசிரியா்கள் பணியிடை நீக்கம்

மணிப்பூா்: தீவிரவாத தாக்குதலில் 2 சிஆா்பிஎஃப் வீரா்கள் உயிரிழப்பு

வறட்சி பாதித்த 22 மாவட்டங்களுக்கு குடிநீா் விநியோகிக்க ரூ.150 கோடி: முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு

ஹெச்சிஎல் நிகர லாபம் ரூ.3,986 கோடியாக உயா்வு

SCROLL FOR NEXT