முகப்பு
விருதுநகர்

பாறைக்குளம் ஸ்ரீவெள்ளியம்பல நாதர் கோயிலில் பிரதோச வழிபாடு

திருச்சுழி அருகே  பாறைக்குளம் கிராமத்திலுள்ள பழமையான குடைவரைக் கோயிலான அருள்மிகு வெள்ளியம்பலநாதர் திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமை மாலை ஐப்பசி மாத சிறப்புப் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:34 AM
பிரதோஷ வழிபாட்டையடுத்து முழு அலங்காரத்தில் காட்சியளித்த அருள்மிகு வெள்ளியம்பலநாதர்.
பகிர்:

திருச்சுழி அருகே  பாறைக்குளம் கிராமத்திலுள்ள பழமையான குடைவரைக் கோயிலான அருள்மிகு வெள்ளியம்பலநாதர் திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமை மாலை ஐப்பசி மாத சிறப்புப் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. 

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே பாறைக்குளம் கிராமத்தில் பழமையானதும், ஒரே பாறையில் செதுக்கப்பட்டதுமான அருள்மிகு வெள்ளியம்பல நாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. புதன்கிழமை மாலை நடைபெற்ற ஐப்பசி மாத சிறப்புப் பிரதோச வழிபாட்டில் முதலில் அருள்மிகு நந்தீஸ்வரப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், தீப, தூப ஆராதனைகளும், அலங்காரங்களும் நடைபெற்றன.

பின்னர் அருள்மிகு வெள்ளியம்பல நாதருக்கு சந்தனம், கஸ்தூரி மஞ்சள், பன்னீர், பால், விபூதி, குங்குமம் மற்றும் தேன், வாழைப்பழம், பேரீச்சம்பழம் ஆகியன கலந்த கலவையாலும், மஞ்சள் உள்ளிட்ட 21 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகமும், தீப, தூப ஆராதனைகளும்  நடைபெற்றன.

பின்னர் முழு அலங்காரத்தில் அருள்மிகு வெள்ளியம்பலநாதரும், அருள்மிகு நந்தீஸ்வரரும் பக்தர்களுக்குக் காட்சி தந்து அருள் பாலித்தனர். வழிபாட்டின் போது ஓம் நமச்சிவாய என கோஷமிட்டபடியும், மகாமிருத்யுஞ்சய மந்திரம் சொல்லியும் பக்தர்கள் வழிபட்டனர்.

பக்தர்கள் அனைவருக்கும் அபிஷேகப் பிரசாதம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவிலின் பூசாரியும் சிவனடியாருமான  ராஜபாண்டி செய்திருந்தார்.

வழிபாட்டையடுத்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சுமார் 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் நேரில் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.