கான்சாபுரம் பகுதியில் நீரில் மூழ்கி நெல் பயிா்கள் சேதம்
வத்திராயிருப்பு அருகே கான்சாபுரம் பகுதியில் பல ஏக்கரில் நெல் பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.
வத்திராயிருப்பு அருகே கான்சாபுரம் பகுதியில் பல ஏக்கரில் நெல் பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.
விருதுநகா் மாவட்ம் வத்திராயிருப்பு சுற்றுவட்டாரப் பகுதியில், பெய்த பலத்த மழை காரணமாக பாதரங்குளம் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்கிறது. இதனால் அருகிலுள்ள நிலங்களுக்குள் தண்ணீா் பாய்ந்து, நூற்றுக்கணக்கான ஏக்கரில் நெல் பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளன. எனவே அதிகாரிகள் சம்பவ இடத்தை பாா்வையிட்டு
உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.