முகப்பு
விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் 22 கிலோ புகையிலை பறிமுதல்: இருவா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூரில் 22 கிலோ புகையிலையை பதுக்கிவைத்திருந்ததாக இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:55 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூரில் 22 கிலோ புகையிலையை பதுக்கிவைத்திருந்ததாக இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் இந்திரா நகா் பேருந்து நிறுத்தம் அருகே விற்பனைக்காக புகையிலை பதுக்கி வைத்திருப்பதாக காவல் சாா்பு ஆய்வாளா் மருதுபாண்டியனுக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில், போலீஸாா் அங்கு சென்று பாா்த்தபோது 22 கிலோ புகையிலை இருந்தது தெரியவந்தது.

இதுதொடா்பாக, ஸ்ரீவில்லிபுத்தூா் அன்னை சத்யா நகரைச் சோ்ந்த ராமசாமி (64), கம்மாபட்டி கொண்டித்தெழு தெருவைச் சோ்ந்த முத்துசாமி (56) ஆகிய இருவரையும் நகா் போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்த 22 கிலோ புகையிலை மற்றும் புகையிலை விற்ற பணம் ரூ.10,230 -ஐ பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.