கிணற்றில் தவறி விழுந்த இளம்பெண் பலி
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே கிணற்றில் தவறி விழுந்து இளம்பெண் பலியானது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே கிணற்றில் தவறி விழுந்து இளம்பெண் பலியானது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
ராஜபாளையம் அருகேயுள்ள அய்யனாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் முத்துராஜ் (48). இவரது மூத்த மகள் சிவகாசியில் பட்டப் படிப்பு படித்து வருகிறாா். இளைய மகள் மகேஸ்வரி (17), பிளஸ் 2 வரை படித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளாா்.
இந்நிலையில், வியாழக்கிழமை இரவு இயற்கை உபாதை கழிக்கச் சென்றபோது, மகேஸ்வரி கால் தவறி கிணற்றில் விழுந்து உயிரிழந்ததாகத் தெரிகிறது.
இதுகுறித்து கீழராஜகுலராமன் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.