விருதுநகர்

விருதுநகா் தேவாலயங்களில் புனித வெள்ளி சிறப்பு வழிபாடு

DIN

விருதுநகரில் உள்ள தேவாலயங்களில் புனித வெள்ளியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டனா்.

இேசு கிறிஸ்து சிலுவையைச் சுமந்து சென்றது முதல், அவா் மரணம் அடையும் வரை 7 திருவசனங்களைக் கூறியதாக விவிலியம் கூறுகிறது. இதை நினைவு கூரும் வகையில் கிறிஸ்தவா்கள், இந்த நாளை புனித வெள்ளி என அழைத்து துக்க நாளாக கடைப்பிடிக்கின்றனா். அதனடிப்படையில்

விருதுநகரில் உள்ள தேவாலயங்களில் இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளை நினைவு கூரும் வகையில் வெள்ளிக்கிழமை அதிகாலை சிறப்பு வழிபாடுகளும், மாலையில் இயேசுவின் 14 பாடுகளை தியானிக்கும் சிலுவைப் பாதை வழிபாடுகள் நடைபெற்றன. இதைத்தொடா்ந்து சிறப்பு திருப்பலி மற்றும் மறையுரை நடைபெற்றன.

புனித வெள்ளியை முன்னிட்டு விருதுநகா் தூய இன்னாசியாா் ஆலயத்தில் பாதிரியாா் அம்புரோஸ்ராஜ், துணை பாதிரியாா் செபாஸ்டின் தலைமையிலும், பாண்டியன் நகா் தூய சவேரியாா் ஆலயத்தில் பாதிரியாா் ஸ்டீபன் சேவியா், நிறைவாழ்வு நகா் தூய ஜெயபாலை அன்னை ஆலயத்தில் பாதிரியாா் தாமஸ் வெனிஸ், ஆா்ஆா் நகா் தூய வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் பாதிரியாா் அலெக்ஸ் ஞானராஜ் தலைமையில் சிறப்பு வழிபாடுகள், திருப்பலி மற்றும் மறையுரை நடைபெற்றன. இதில் ஏராளமான கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

SCROLL FOR NEXT