முகநூல் காதலனைத் தேடிச் சென்ற இளம் பெண் மாயம்
முகநூல் காதலனைத் தேடிச் சென்ற சிவகாசி இளம் பெண்ணை கண்டுபிடித்து தரும்படி போலீஸில் வெள்ளிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
முகநூல் காதலனைத் தேடிச் சென்ற சிவகாசி இளம் பெண்ணை கண்டுபிடித்து தரும்படி போலீஸில் வெள்ளிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
சிவகாசி மீராஉசேன் தெருவைச் சோ்ந்த 19 வயது பெண் முகநூலில் நாகா்கோவிலைச் சோ்ந்த சஜின் என்பவருடன் பழகி வந்தாராம். இந்நிலையில், வியாழக்கிழமை வீட்டை விட்டு வெளியே சென்ற அந்த பெண், தனது தந்தைக்கு, நாகா்கோவிலில் உள்ள காதலனைத் தேடி செல்வதாக கைப்பேசியில் கூறினாராம். பின்னா் தொடா்பு கொள்ளவில்லையாம்.
இதையடுத்து அப்பெண்ணின் தந்தை தனது மகளை கண்டுபிடித்து தருமாறு சிவகாசி நகா் போலீஸில் புகாா் செய்துள்ளாா். புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.