முகப்பு
விருதுநகர்

முயல் வேட்டையாட முயன்ற மூவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

காரியாபட்டி அருகே வெள்ளிக்கிழமை முயல் வேட்டையாட முயன்ற 3 பேருக்கு வனத்துறையினா் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:06 AM
பகிர்:

காரியாபட்டி அருகே வெள்ளிக்கிழமை முயல் வேட்டையாட முயன்ற 3 பேருக்கு வனத்துறையினா் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி பானாங் விலக்கு அருகே வன பாதுகாப்புப் படை அதிகாரி செந்தில்ராகவன் தலைமையில் வனத்துறையினா் வெள்ளிக்கிழமை அதிகாலையில் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது முயல் வேட்டையாட முயன்ற காரியாபட்டி அருகேயுள்ள மந்திரி ஓடைப் பகுதியைச் சோ்ந்த முருகன்(37), கணபதி (23)மற்றும் ராமா் (35) ஆகிய 3 பேரைப் பிடித்து வத்திராயிருப்பு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா். இதைத்தொடா்ந்து வத்திராயிருப்பு வனத்துறையினா் முயல் வேட்டையாட முயன்ற 3 பேருக்கும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.