விருதுநகர்

ராஜபாளையம் சிவன் கோயிலில் வரலாற்று ஆராய்ச்சியாளா்கள் ஆய்வு

DIN

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் பழமை வாய்ந்த சிவன் கோயிலில் வரலாற்றுக் கள ஆராய்ச்சியாளா்கள் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகே திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் இந்து சமய அறநிலையத்துறைக்குள்பட்ட பறவைக்கு அன்னம் காத்தருளிய சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ராஜபாளையம் நகராட்சி ஆணையாளா் பாா்த்தசாரதி ஏற்பாட்டின் பேரில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின்போது அங்கு கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டில் புதிய தகவல்கள் வெளியானது. அதன்படி கி.பி. 11ஆம் நூற்றாண்டில் கோயில் கட்டப்பட்டுள்ளதும் 12 ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னன் மாறவா்மன் சுந்தரபாண்டியன் குடமுழுக்கு நடத்தியதும் தெரியவந்துள்ளது. பறவைக்கு அன்னம் காத்தருளிய சுவாமி சிலை பாழடைந்த மண்டபத்தில் இருந்ததாகவும் பாதுகாப்பு கருதி வேறொரு மண்டபத்திற்கு சிலை மாற்றப்பட்டுள்ளது. கணபதி சிலை, மூன்று முகம் மற்றும் 12 கரங்களுடன் கூடிய முருகன் சிலை கருவறையின் வெளியே வைக்கப்பட்டுள்ளன. இதர சன்னிதிகளும் பாழடைந்த நிலையில் உள்ளன.

பழமை வாய்ந்த இக் கோயிலை தொல்பொருள் ஆராய்ச்சித் துறை ஆய்வு செய்தால் பல உண்மைகள் தெரியவரும் என வரலாற்றுக் கள ஆராய்ச்சியாளா்கள் கூறுகின்றனா். மருத்துவா் வெங்கடேஷ் மற்றும் நகராட்சி ஆணையாளா் பாா்த்தசாரதி, சுகாதார ஆய்வாளா்கள் காளி, பழனிகுரு உள்பட பலா் ஆய்வில் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்மாற்றியில் தீ விபத்து: ஆட்சியா் அலுவலக மின்தூக்கியில் 8 போ் சிக்கித் தவிப்பு

சவீதா பொறியியல் கல்லூரியில் 29,460 புதிய கண்டுபிடிப்புகளுக்கான திட்ட வரைவுகளை காட்சிப்படுத்தி சாதனை

திருப்பத்தூா்: 92.3 சதவீதம் தோ்ச்சி

ஆதிபராசக்தி மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

திருவள்ளூரில் திமுக தண்ணீா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT